ADDED : ஜன 29, 2025 08:23 PM
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன், 2020ம் ஆண்டு டில்லியில் நடந்த கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், டில்லி சட்டசபைத் தேர்தலில் 'அனைத்திந்திய மஜ்லிஸ் - இ - இத்தேஹாதுல் முஸ்லிமீன்' - கட்சி சார்பில், முஸ்தபா பாத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்துக்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு நேற்று முதல் பிப்.,3ம் தேதி வரை பரோல் வழங்கியது. ஆனால், காரவால் நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை போலீஸ் கண்காணிப்பில் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு செலவாக ஒரு நாளைக்கு 2.47 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்த தாஹிர் உசேன்.

