sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெப்ப அலையால் பிரசாரத்தில் வேட்பாளர்கள் பரிதவிப்பு! வட மாவட்டங்களை வறுக்கும் கோடை வெயில்

/

வெப்ப அலையால் பிரசாரத்தில் வேட்பாளர்கள் பரிதவிப்பு! வட மாவட்டங்களை வறுக்கும் கோடை வெயில்

வெப்ப அலையால் பிரசாரத்தில் வேட்பாளர்கள் பரிதவிப்பு! வட மாவட்டங்களை வறுக்கும் கோடை வெயில்

வெப்ப அலையால் பிரசாரத்தில் வேட்பாளர்கள் பரிதவிப்பு! வட மாவட்டங்களை வறுக்கும் கோடை வெயில்


ADDED : மே 02, 2024 06:28 AM

Google News

ADDED : மே 02, 2024 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில், 14 லோக்சபா தொகுதிகளில் மே 7ல் நடக்க உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கு, அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் பம்பரமாக சுற்றி வருகின்றனர். ஆனால், வட மாவட்டங்களை வறுத்தெடுக்கும் கோடை வெயிலால், பகல் நேரங்களில் பிரசாரம் செய்ய முடியாமல் பரிதவிக்கின்றனர்.

கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில், 14 தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26ல் முதற்கட்ட ஓட்டு பதிவு நடந்து முடிந்தது. மே 7ல் இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கவுள்ள, 14 தொகுதிகளில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். அந்தந்த தொகுதிகளில் வேர்க்க, விறுவிறுக்க பிரசாரம் செய்கின்றனர்.

ஆனால் இவர்களின் உற்சாகம் மற்றும் வேகத்துக்கு, வெப்ப அலை முட்டுக்கட்டை போடுகிறது. கோடை வெயில் மக்களை, அரசியல் தலைவர்களை வறுத்தெடுக்கிறது.

வெயில் மாவட்டங்கள் என அழைக்கப்படும் கலபுரகி, பீதர், ராய்ச்சூர், விஜயபுரா, பல்லாரி, கொப்பால், ஹாவேரி, பெலகாவி, தாவணகெரே, சிக்கோடி, தார்வாட், உத்தரகன்னடா, ஷிவமொகா, பாகல்கோட் தொகுதிகளில், மே7ல் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. பா.ஜ.,வுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் நட்டா, காங்கிரசுக்காக ராகுல், பிரியங்கா, முதல்வர் சித்தராமையா உட்பட் முக்கிய தலைவர்கள் பலரும் பிரசாரம் செய்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமாண்ட பொதுக்கூட்டம், ரோடு ஷோ, ஊர்வலங்கள் நடத்தி, தங்கள் சக்தியை காண்பிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நிகழ்ச்சிகளுக்கு மக்களை சேர்ப்பது, தலைவர்களுக்கு பெரும்பாடாக உள்ளது.

பல மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பக்காற்று வீசுகிறது. வெப்பத்தை தாங்க முடியாமல், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், ரோடு ஷோக்களில் மக்கள் அவ்வளவாக பங்கேற்பதில்லை. காலி இருக்கைகளை பார்த்து தலைவர்கள் உரையாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராய்ச்சூர், கலபுரகி, பீதர், கொப்பால், விஜயபுரா, ஹாவேரி, பல்லாரி என, வட மாவட்டங்களில் வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்ஷியஸை எட்டியுள்ளது. எனவே தலைக்கு 1,000 ரூபாய், பிரியாணி கொடுத்தாலும் மக்கள் வருவதில்லை.

'பிரசாரத்துக்கு வரும் மக்களுக்கு மோர், குளிர்பானம் ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களில் மக்களை வெயிலில் இருந்து காப்பாற்ற, பெரிய, பெரிய பந்தல், சாமியானா வசதி செய்ய வேண்டும். வெப்பம் அதிகம் உள்ளதால், அதிக நேரம் அமர்ந்திருக்க முடியாது' என நிபந்தனைகள் விதிக்கின்றனர். அதிகபட்சம் முக்கால் மணி நேரம் தாக்கு பிடிக்கின்றனர். அதன்பின் ஒருவர் பின் ஒருவராக எழுந்து செல்ல துவங்குகின்றனர். இருக்கைகள் காலியாகின்றன.

அரசியல் தலைவர்கள், அமைச்சர்களும் கூட வெயிலை தாங்க முடியாமல் பரிதவிக்கின்றனர். அதிக நேரம் கூட்டங்களில் அமர முடிவதில்லை. உரையாற்ற முடிவதில்லை. இதே காரணத்தால், காலை 10:00 மணிக்குள் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்கள் நடத்துகின்றனர். வெப்பம் குறைந்தபின் மாலை நேரங்களில், கூட்டங்கள், ரோடு ஷோக்களை நடத்துகின்றனர்.

அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், காலை 7:00 மணி முதல், 8:00 மணிக்குள் வீடு, வீடாக பிரசார பிரசுரங்களை கொடுத்துவிட்டு, வீடு திரும்புகின்றனர். அதிகமான மக்களை சென்றடைய வெப்பம் இடையூறாக உள்ளதே என வேட்பாளர்கள், தலைவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையில் நேற்று பாகல்கோட்டில் 45.3, ராய்ச்சூரில் 45.2, யாத்கிரில் 45.1, விஜயபுராவில் 45 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. எதிர் வரும் நாட்களில், வெப்ப காற்று அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது, வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.

பா.ஜ., மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள் வேறு வழியின்றி பிரசாரம் செய்கின்றனர். இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கும், மே 7ல் வெப்பக்காற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் ஓட்டு பதிவு சதவீதம் குறையும் என்ற கவலை, தேர்தல் அதிகாரிகளை வாட்டி வதைக்கிறது.

...பாக்ஸ்...

8 மாவட்டங்களில்

கடும் வெயில்

கர்நாடகாவில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று எட்டு மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஷியஸுக்கு மேல், வெயில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கலபுரகியில் 43.6 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. ராய்ச்சூரில் 43.4; விஜயபுராவில் 41.8; கொப்பாலில் 42.3; கதக்கில் 40.3; பாகல்கோட்டில் 41.3; தார்வாட், பீதரில் 40.2 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. மாண்டியாவில் 39.6; சித்ரதுர்காவில் 39; பெங்களூரில் 38.2; ஹாசனில் 39.1; மைசூரில் 37.8; மங்களூரில் 34.4; உத்தர கன்னடாவில் 34.8 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us