ADDED : அக் 29, 2024 10:51 PM

காஜியாபாத் :உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியின் அறையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
உ.பி.,யில் காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணை தொடர்பாக நீதிபதிக்கும், வழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிபதி அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக நீதிபதி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனால், நீதிபதியுடன் வழக்கறிஞர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் வந்த போலீஸ் படையினர், நீதிபதி அறையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்களை தடியடி நடத்தியும், நாற்காலிகளை துாக்கி வீசியும் அடித்து விரட்டினர். இதில், வழக்கறிஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் முகாம்களை அடித்து நொறுக்கினர். நீதிபதிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் வழக்கறிஞர்களின் செயலை கண்டித்து, நீதிபதிகள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.