தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தாய்லாந்திலிருந்து எடுத்து வந்த ரூ.25 கோடி கஞ்சா பறிமுதல்

 தாய்லாந்திலிருந்து எடுத்து வந்த ரூ.25 கோடி கஞ்சா பறிமுதல்

 தாய்லாந்திலிருந்து எடுத்து வந்த ரூ.25 கோடி கஞ்சா பறிமுதல்


ADDED : மே 08, 2026 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், மூன்று நபர்களிடம் இருந்து, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களிடம், போதைப்பொருள் ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 3ம் தேதி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து டில்லி சர்வதேச விமான நிலையம் வந்த விமானத்தில் வந்திறங்கிய இந்திய பயணி ஒருவர் வைத்திருந்த கைப்பை மீது சந்தேகம் கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார், அந்த பையை சோதனையிட்டனர். அதில், மறைத்து வைத்திருந்த, 1 கிலோ உயர் ரக கஞ்சாவை கைப்பற்றி, அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் சர்வதேச மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

அதற்கு மறுநாள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவரிடம் போதை ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், 18 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டு, அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

அதன் சர்வதேச மதிப்பு, 18 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

அதுபோல, கடந்த 6ம் தேதி, பாங்காக்கில் இருந்து வந்த இந்திய பிரஜையின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரிடம் நடத்திய சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதன் மதிப்பு, 6 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இவ்வாறு கடந்த மூன்று நாட்களில், தாய்லாந்தில் இருந்து, டில்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணியரிடம் நடத்திய சோதனையில், 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதால், அந்த விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us