தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்
தாங்க முடியவில்லை! தண்ணீர் தாருங்கள்!: உ.பி, ஹரியானா முதல்வருக்கு டில்லி அமைச்சர் கடிதம்
ADDED : ஜூன் 02, 2024 02:13 PM

புதுடில்லி: கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
டில்லியில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான வெப்ப அலையால் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்காக அல்லாடு கின்றனர். லாரிகளில் வரும் தண்ணீரை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடக்கிறது.
கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, உபரி நீரை திறந்து விட ஹரியானா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அமைச்சர் ஆதிஷி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கடிதம்
இந்நிலையில், டில்லிக்கு ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனிக்கு டில்லியின் நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர், '' தண்ணீர் பற்றாக்குறையால் டில்லி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். யமுனா ஆற்றில் மேலும் ஒரு மாதத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.