ADDED : மே 02, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்ரதுர்கா; கர்நாடகாவில் கார் டயர் வெடித்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது பேர் குழுவினர், டொயோட்டா இன்னோவா காரில் கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
நேற்று காலை, கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா தாலுகாவின், சீபாரா அருகில் தேசிய நெடுஞ்சாலை - 4ல், கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை டிவைடரில் மோதி, பக்கத்து சாலையில் பாய்ந்து கவிழ்ந்தது.
இதில் பயணித்த அர்ஜுன், 35, சரண், 28, ஸ்ரீதர், 28, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அர்ஜுன், கிருஷ்ணகிரியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றுபவர். மற்ற ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
போலீசார் விசாரித்து வருகின்றனர்.