தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சாலையோரம் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்களை நசுக்கிய கார் : ஒருவர்பலி

சாலையோரம் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்களை நசுக்கிய கார் : ஒருவர்பலி

சாலையோரம் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்களை நசுக்கிய கார் : ஒருவர்பலி


ADDED : பிப் 14, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மேற்கு டில்லியில், வேகமாக வந்த கார் மோதியதில், சாலையோரம் நிறுத்தியிருந்த பல ஸ்கூட்டர்கள் நசுங்கின. விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர், காரை அப்படியே விட்டு தப்பினார்.

பதேநகர் பகுதியில் நேற்று அதிகாலை வேகமாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்தவர், மதுபோதையில் இருந்தவர் போல தெரிந்தது. சாலையோரம் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர்கள் மீது மோதியதில், பல வாகனங்கள் நசுங்கின. எனினும், இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஸ்கூட்டர்கள் மீது மோதியதால், நிலை தடுமாறிய கார், ஒரு ஓரமாக நின்றது. அதிலிருந்து சாவகாசமாக இறங்கிய காரை ஓட்டி வந்த நபர், அங்கிருந்து நடந்து தப்பினார்.

ஸ்கூட்டரை ஓட்டி வந்த நபர், தப்பி சென்றதை தாமதமாக அறிந்த, போலீசார், அந்த நபரை தேடி வருகின்றனர்.



வேகமாக சென்ற லாரி மோதியதில்மாணவர் பலி; மற்றொருவர் படுகாயம்

புதுடில்லி: வேகமாக சென்ற லாரி, முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியதில், அதில் பயணித்த மாணவர்களில் ஒருவர் பலியானார். அவரின் நண்பர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டில்லியின் மதுரா மேம்பாலம் அருகே உள்ள நியுபிரண்ட்ஸ் காலனி பகுதியில் இந்த கோரமான விபத்து நிகழ்ந்தது. ஜாஹுல், 32, என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து, திடீரென முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், அந்த ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற மானவ், 19, என்ற மாணவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் தந்தை பெயரிலான ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த முகமது சாத், 21, என்பவர் படுகாயம் அடைந்தார்.

முழு அளவில் லோடு ஏற்றப்பட்டிருந்த அந்த லாரி, பதார்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரி டிரைவர், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

விபத்தில் சிக்கிய ஸ்கூட்டரை ஓட்டியவரும், அதன் பின் அமர்ந்திருந்தவரும், ஹெல்மெட் அணியவில்லை.



3 பேரை சுட்டு பிடித்தடில்லி போலீசார்

புதுடில்லி: மீரட் நகரை சேர்ந்த மூன்று பேர் ரவுடி கும்பலை, டில்லி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த ரவுடி கும்பல் டில்லியின் உஸ்மான்பூர் என்ற இடத்தில் சுற்றித்திரிவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதியில், வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்த போலீசாரை கண்டதும், மூன்று பேருடன் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், திடீரென தாங்கள் ஓட்டி வந்த வாகனத்தை திருப்பினர்.

அதை அறிந்த போலீசார், அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அவர்களை ஓட விடாமல் பிடித்து, கைது செய்த போலீசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து விசாரிக்கின்றனர்.

ஹோட்டல் மாடியிலிருந்து குதித்த இளம்பெண் படுகாயம்

புதுடில்லி: கிழக்கு டில்லில் உள்ள பார்ஸ் பஜார் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின், நான்காவது மாடியிலிருந்து, 20 வயது மதிக்கத்தக்க பெண், கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்த, 22 வயது ஆண் நபருடன், அந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் தங்கிய அந்த பெண், வாக்குவாதம் ஏற்பட்டு, நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.

அந்த பெண், டில்லியின் சுந்தர் நகரி என்ற பகுதியை சேர்ந்தவர். அவருடன் தங்கியிருந்த ஆணுக்கும், அவருக்கும் இடையே என்ன விவகாரம் தொடர்பாக விவாதம் ஏற்பட்டது என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண், வாயை திறந்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்பதால், அந்த பெண் பேசுவதை போலீசார் எதிர்நோக்கியுள்ளனர்.

மெஹ்ராலி - பதார்பூர் சாலையில்

விழுந்த மெட்ரோ கிரேன்

புதுடில்லி: டில்லியின் மெஹ்ராலி - பதார்பூர் சாலையில், கிரேன் ஒன்று சரிந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தெற்கு டில்லியின் தனியார் மருத்துவமனை அருகே, டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சார்பில், கிரேன்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டன.

நேற்று காலையில், அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன்களில் ஒன்று, திடீரென சரிந்து விழுந்தது.

முக்கிய சாலை சந்திப்பில் நடந்த இந்த விபத்து தொடர்பாக, அந்த பகுதியில் போக்குவரத்து முதலில் தடை செய்யப்பட்டது. பின், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

இதையடுத்து, அந்த இடத்தை நத்தை வேகத்தில் வாகனங்கள் கடந்ததால், போக்கு வரத்து நெரிசல் பல மணி நேரம் நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us