sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாக்., ட்ரோன் தாக்குதலில் கார் சேதம்; 3 பேர் காயம்

/

பாக்., ட்ரோன் தாக்குதலில் கார் சேதம்; 3 பேர் காயம்

பாக்., ட்ரோன் தாக்குதலில் கார் சேதம்; 3 பேர் காயம்

பாக்., ட்ரோன் தாக்குதலில் கார் சேதம்; 3 பேர் காயம்


ADDED : மே 09, 2025 11:39 PM

Google News

ADDED : மே 09, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெராஸ்பூர்: பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூர் மீது இன்று இரவு(மே 9) பாக்., நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகளை குறிவைத்து இந்தியா நடத்திய ‛ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப்பின், இந்தியா மீது பாக்., தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி தந்து வருகிறது. தொடர்ந்து 2வது நாளாக, இன்று இரவும், பாக்., ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி, இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரை குறிவைத்து, பாக்., நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர். பாக்., அனுப்பிய ட்ரோன் விழுந்து வெடித்ததில், கார் தீப்பற்றி சேதம் அடைந்தது. அதில் இருந்த 3 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெராஸ்ர் எஸ்.எஸ்.பி., பூபிந்தர் சிங் சித்து கூறுகையில், 'ட்ரோன் தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ட்ரோன்கள் ராணுவத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன' என்றார்.






      Dinamalar
      Follow us