காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டில்லி குண்டு வெடிப்பில் 'திடுக்'
காஷ்மீர் புல்வாமா நபருக்கு விற்கப்பட்ட கார்: டில்லி குண்டு வெடிப்பில் 'திடுக்'
UPDATED : நவ 11, 2025 11:46 AM
ADDED : நவ 11, 2025 08:57 AM

புதுடில்லி: டில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது. தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
தலைநகர் டில்லி செங்கோட்டை அருகே நேற்று காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பபட்ட சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து டில்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கார் கடைசியாக புல்வாமா நபருக்கு கை மாறியது.தற்போதைய உரிமையாளர் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இவர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நிறைந்த பகுதி புல்வாமா என்பதால் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காரின் முதல் உரிமையாளர் சல்மானுக்கு பிறகு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கியது அம்பலம் ஆகி உள்ளது. சல்மானிடம் இருந்து நதீம் என்பவருக்கு கார் விற்கப்பட்ட நிலையில் அது மூன்றாவதாக காஷ்மீர் புல்வாமா பகுதிக்கு கை மாறி இருக்கிறது.
போலீசார் இப்போது புல்வாமாவை சேர்ந்த உமரை தேடி வருகின்றனர். இறந்தவர்களில் அவரும் இருக்கிறாரா என்று விசாரித்து வருகின்றனர். ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீலுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் துப்பாக்கி, வெடிபொருட்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பலிடம் இருந்து 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதே நாளில் டில்லி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதனால் வெடிபொருள் பதுக்கிய கும்பலுக்கும் குண்டு வெடிப்பு நிகழ்த்திய நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலு அடைந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

