பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு: டில்லி கவர்னர் ஒப்புதல்
பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு: டில்லி கவர்னர் ஒப்புதல்
ADDED : ஜூன் 14, 2024 08:18 PM

புதுடில்லி: 14 ஆண்டுகளுக்கு முன் பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்கு தொடர டில்லி துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் அருந்ததிராய், சமூக ஆர்வலராகவும் உள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், காஷ்மீர் விவகாரம் மற்றும் மாவோயிஸ்டு ஆதரவு நிலைப்பாட்டுடன் பேசினார். இவரது பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அருந்ததிராய், பேராசிரியர் சவுகத் ஹூசைன் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர்., பதியப்பட்டு டில்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கினை யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் வழக்கு தொடர டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.