உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 16, 2024 02:46 AM
அ நிறம் | அளவு
ஷிவமொக்கா: 'ஒரு மதத்தினரை கொல்ல விரைவில் நாட்கள் வரும்' என்று பேசிய, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
பா.ஜ, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா. கடந்த 13ம் தேதி ஷிவமொக்காவில் பேட்டி அளிக்கும்போது, 'கர்நாடகாவில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஹிந்து மதத்தை பாதுகாக்க சாதுக்கள், துறவிகள் தலைமையில் அனைவரும் பொங்கி எழ வேண்டும். ஒரு மதத்தினரை கொல்லும் காலம் விரைவில் வரும்' என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சு, வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதன் அடிப்படையில், ஈஸ்வரப்பா மீது ஷிவமொக்கா ஜெயநகர் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
