உள்ளடக்கத்திற்கு செல்ல

பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் என் மீது வழக்கு: ராகுல் பேச்சு
பா.ஜ.,வுக்கு எதிராக போராடியதால் என் மீது வழக்கு: ராகுல் பேச்சு
ADDED : மே 30, 2024 01:51 PM

அ நிறம் | அளவு
பாலசோர்: பா.ஜ.,வுக்கு எதிராக போராடி வருவதால் என் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது: நான் பா.ஜ.,வுக்கு எதிராக போராடுகிறேன். இதனால், என் மீது அவதூறு மற்றும் கிரிமினல் வழக்குகள் என 24 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனது எம்.பி., பதவியை பறித்தார்கள். 2.5 ஆண்டு சிறை தண்டனை வழங்கினர். அமலாக்கத்துறை 50 மணி நேரம் என்னிடம் விசாரணை நடத்தியது. ஆனால், உண்மையில் பா.ஜ.,வுக்கு எதிராக நவீன் பட்நாயக் போராடினால், அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.
