ADDED : டிச 20, 2024 05:53 AM

பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு விசாரணையை, ஜன., 7ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது, சிறுமியின் தாயார் புகார் செய்திருந்தார். இவ்வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், எடியூரப்பா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடியூரப்பாவின் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாரணை அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சரியானதா என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். விசாரணை அதிகாரிக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து தவறான கண்ணோட்டத்துக்கு வந்துள்ளார்' என்றார்.
இதையடுத்து, அடுத்த விசாரணையை, ஜனவரி 7ம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.