பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு
பெண் மருத்துவருக்கு மிரட்டல் 72 முதியவர் மீது வழக்கு
ADDED : ஆக 29, 2024 07:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்கோல்புரி:சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர்களை மிரட்டியதாக முதியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் முதியவர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு ஒருவரின் பெயரைக் கூறி, அவர் குறித்து விசாரித்துள்ளார்.
அப்போது பெண் மருத்துவர், ஊழியர்களை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மங்கோல்புரி போலீசில் பெண் மருத்துவர் புகார் அளித்தார். மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், பணியில் இருந்து நீக்குவதாகவும் அவர் மிரட்டியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
அதன்பேரில், பூபேந்திர சிங், 72, என்ற முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.

