இன்போசிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு!
இன்போசிஸ் கோபாலகிருஷ்ணன் மீது பாய்ந்தது வன்கொடுமை வழக்கு!
ADDED : ஜன 28, 2025 09:43 AM

பெங்களூரு; இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் 17 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
போவி என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா என்பவர் இந்த புகாரை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி உள்ளதாவது; நான் இந்திய அறிவியில் மையத்தின் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணிபுரிந்தேன்.
2014ம் ஆண்டு போலியான பாலியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டு பணி நீக்கத்துக்கு ஆளானேன். அந்த வழக்கில் சாதிய ரீதியாக அவதூறுகள், அச்சுறுத்தல்களுக்கும் ஆளானேன்.
இவ்வாறு புகாரில் அவர் கூறி உள்ளார்.
துர்கப்பாவின் புகாரைத் தொடர்ந்து பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்போசிஸ் துணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
இவர் மட்டும் அல்லாது, கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஸ்வேஸ்வரய்யா, ஹரி உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவாகி இருக்கிறது.