செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு
ADDED : மே 15, 2024 11:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மே 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று (மே 15) விசாரணை நடைபெற இருந்த நிலையில், நாளைக்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.

