ADDED : ஜன 29, 2025 07:48 PM
கொச்சி:மலையாள நடிகை அளித்த புகாரில், பிரபல இயக்குநர் சணல் குமார் சசிதரன் மீது கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கயாட்டம் என்ற மலையாள படத்தின் இயக்குன்ரான சணல் குமார் சசிதரன் மீது, மலையாள நடிகை ஒருவர் கொச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
அதில், சமூக வலைதளத்தில் தன்னை தொடர்ந்து அவமதிக்கும் வகையிலும், துன்புறுத்தும் வகையிலான பதிவுகளை இயக்குநர் வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து, சசிதரன் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை நகலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், நடிகை பெயரில் யாரோ ஒருவர் தன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே நடிகை, தன்னை சமூக வலைதளம் வாயிலாக மிரட்டியதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் இயக்குநர் சசிதரன் மீது, கடந்த 2022 மே மாதம் வழக்கு தொடர்ந்தார்.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இயக்குநர் சசிதரன், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

