பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் வெகுமதி
பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் வெகுமதி
ADDED : ஏப் 23, 2025 10:15 PM

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. பயங்கரவாதிகள் நடமாட்டம், அவர்களின் இருப்பிடங்கள் குறித்து நடவடிக்கைகளை அறியும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று அனந்த்நாக் காவல்துறை அறிவித்துள்ளது. தமது சமூகவலை தள பதிவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கோழைத்தனமாக தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அழிக்க வழிவகை செய்யும் எந்த ஒரு தகவலுக்கும் ரூ.20 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்.
தகவல் அளிப்பவரின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.