தமிழகத்திற்கு 5.367 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
தமிழகத்திற்கு 5.367 டி.எம்.சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவு
ADDED : ஜூன் 25, 2024 03:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31வது கூட்டம், அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
'தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும். ஜூலை மாதத்திற்கான 31.24 டி.எம்.சி நீரையும் உரிய நேரத்தில் திறந்துவிட வேண்டும்' என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.