12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் கால்குலேட்டர் அனுமதி; சி.பி.எஸ்.இ. புதிய திட்டம்
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் கால்குலேட்டர் அனுமதி; சி.பி.எஸ்.இ. புதிய திட்டம்
ADDED : மார் 25, 2025 07:31 AM

புதுடில்லி; கணக்கு பதிவியல் தேர்வில் 12ம் வகுப்பு மாணவர்கள், கால்குலேட்டர் பயன்படுத்திக் கொள்ள சி.பி.எஸ்.இ., அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளது.
2025-26ம் கல்வியாண்டில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதற்கான ஆலோசனைகளிலும் ஈடுபட்டுள்ளது. 140வது ஆட்சிமன்ற குழுவின் கூட்டத்தில் சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் கூறியதாவது;
12ம் வகுப்பு கணக்கு பதிவியல்(அக்கவுன்டன்சி) மாணவர்கள் கூட்டல், கழித்தல, வகுத்தல், பெருக்கல் மற்றும் சதவீத கணக்கீடு வசதிகள் கொண்ட கால்குலேட்டர் (basic calculator) பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.
விரைவில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். புதிய கல்விக் கொள்கை மற்றும் சர்வதேச மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்ய ஆன் ஸ்கீரின் மார்க்கிங்(OSM - On screen marking) என்ற முறை அறிமுகப்படுத்தப்படும். மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள், இந்த புதிய மறுமதிப்பீடு முறையால் வெளிப்படைத்தன்மையை உணர்வர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.