மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது சி.பி.எஸ்.இ.,
மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது சி.பி.எஸ்.இ.,
ADDED : ஜூன் 30, 2026 04:22 AM

புதுடில்லி: மும்மொழி கொள்கை தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போதைய கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
தற்போது ஏழு, எட்டு மற்றும் ஒன்பதா-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்புக்கு செல்லும் போது மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை
ஏழு, எட்டு மற்றும் ஒன்பதா-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிக்கும் மாணவர்கள், அவற்றை தொடரலாம்
அவர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை சேர்த்து, மூன்று மொழிகளை படிக்க வேண்டும்
இந்த கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில், 'ஸ்டாண்டர்டு, அட்வான்ஸ்டு' என இரண்டு நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன
அனைத்து மாணவர்களும், 80 மதிப்பெண்களுக்கு பொதுவான தேர்வை எழுதுவர்
பாடங்களில் கூடுதல் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள், ஆழமான கருத்து புரிதல் மற்றும் உயர்நிலை சிந்தனை திறன்களை சோதிக்க, 'அட்வான்ஸ்டு' தேர்வை எழுதலாம். இந்த முறையின் கீழ், 2028ல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
