தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சி.பி.எஸ்.இ., தளத்தில் கோளாறு; சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு

 சி.பி.எஸ்.இ., தளத்தில் கோளாறு; சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு

 சி.பி.எஸ்.இ., தளத்தில் கோளாறு; சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் ஆய்வு


ADDED : மே 27, 2026 07:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 07:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சி.பி.எஸ்.இ., இணையதளத்தை மாணவர்கள் பயன்படுத்த முடியாத வகையில், சமீபத்தில் கோளாறு ஏற்பட்ட நிலையில், அவற்றை ஆய்வு செய்து கண்டறிய சென்னை மற்றும் கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த நிபுணர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத் தாள்கள் இந்த ஆண்டு, 'டிஜிட்டல்' முறையில் மதிப்பீடு செய்யப்பட்டன.

மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக வந்ததால், பல மாணவர்கள் மற்றும் பெற்றோர் மதிப்பீட்டில் சந்தேகம் எழுப்பினர்.

விடைத்தாள்களை நேரடியாக பார்த்து, எங்கு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன என அறிய விரும்பிய மாணவர்கள், 'ஸ்கேன்' பிரதிகளுக்கு விண்ணப்பிக்க முயன்றனர்.

அப்போது சி.பி.எஸ்.இ., இணையதளம் செயலிழந்தது. பலருக்கு உள்நுழைவதில் சிக்கல், பணம் செலுத்த முடியாமை, பணம் செலுத்தியும் விடைத்தாள் வராதது, வந்த விடைத்தாள்களும் மங்கலாக இருந்தது போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டனர்.

இந்த பிரச்னைகளை தீர்க்கும்படி, ஐ.ஐ.டி., சென்னை மற்றும் ஐ.ஐ.டி., கான்பூருக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த 24ம் தேதி உத்தரவிட்டார். அவர்கள் பிரச்னை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:

தற்போது சி.பி.எஸ்.இ., இணையதளம் வழக்கம் போல் இயங்கி வருகிறது. மாணவர்களின் விடைத்தாளை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்தது வெளிப்படைத்தன்மையை காட்டுகிறது.

ஆனால், பணம் செலுத்தும் முறையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. எங்கள் குழுவினர் இணையதளத்தை முழுமையாக ஆய்வு செய்வர். எதிர்காலத்தில் இத்தகைய கோளாறுகள் வராத வகையில், வலுவான தளத்தை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us