ADDED : பிப் 06, 2025 11:37 PM

புதுடில்லி: தேர்வு குறித்த பயத்தை நீக்கி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடத்தப்படும், 'பரீட்சா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சி, 10ம் தேதி நடக்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் இந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்களும் இந்தாண்டு பங்கேற்கின்றனர்.
தேர்வு தொடர்பாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், தேர்வை எவ்வித பயமும் இன்றி சந்திப்பது தொடர்பான ஆலோசனையை பிரதமர் வழங்குவார்.
இந்த முறை பிரதமருடன், பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஈஷா யோகா மைய தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லேக்ரா, ஊட்டச்சத்து நிபுணர்கள் ருஜதா திவாகர், சோனாலி சபர்வால், உடல்திறன் ஊக்குவிப்பாளர் புட் பார்மர், திரை நட்சத்திரங்கள் விக்ரந்த் மாசி, பூமி பட்நாகர், யு டியூபர் டெக்னிகல் குருஜி எனப்படும் கவுரவ் சவுத்ரி, ராதிகா குப்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.