மத்திய நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடி: 10 ஆண்டில் 182 சதவீதம் உயர்ந்து சாதனை!
மத்திய நேரடி வரி வசூல் ரூ.19.60 லட்சம் கோடி: 10 ஆண்டில் 182 சதவீதம் உயர்ந்து சாதனை!
ADDED : அக் 17, 2024 08:14 PM

புதுடில்லி: மோடி அரசின் 10 ஆண்டு காலத்தில், மத்திய நேரடி வரி வசூல் 182 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் நிதியாண்டில் 6.95 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நேரடி வரி வசூல், 2024ம் நிதியாண்டில் ரூ.19.60 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
தனி நபர் வருமான வரி வசூல், 294.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2015ம் நிதியாண்டில், 2.65 லட்சம் கோடி ரூபாயாக இருந்த தனி நபர் வருமான வரி, 2024ம் நிதியாண்டில் 10.45 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.வருமான வரி தாக்கல் 2015ம் ஆண்டில் 4.04 கோடி கணக்கு என்ற அளவில் இருந்தது, 2024ம் ஆண்டில் 8.61 கோடி கணக்குகளாக அதிகரித்துள்ளது.
வருமான வரி தாக்கல் செய்த தனி நபர்களின் எண்ணிக்கை, 3.74 கோடியில் இருந்து 8.13 ஆக அதிகரித்துள்ளது.கார்ப்பரேட் நிறுவன வரி வசூல் 2015ல், 4.28 லட்சம் கோடியாக இருந்தது, 2024ல் 9.11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.