sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கிற்கு தடை: மத்திய அரசு

/

செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கிற்கு தடை: மத்திய அரசு

செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கிற்கு தடை: மத்திய அரசு

செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கிற்கு தடை: மத்திய அரசு

4


ADDED : மார் 06, 2026 08:02 PM

Google News

4

ADDED : மார் 06, 2026 08:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஈரான் - இஸ்ரேல் இடையிலான மோதல் தொடர்பாக மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் செய்திகள் வெளியாவதால், டிஆர்பி எனப்படும் டிவி ரேட்டிங் பாயின்ட்ஸ் முறையை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரை, சில குறிப்பிட்ட டிவி செய்தி சேனல்கள் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அச்சமூட்டும் செய்திகளையும், காட்சிகளையும் ஒளிபரப்பி வருவது அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை இருப்பவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

எனவே பொது மக்களின் நலன் கருதி டிஆர்பி எனப்படும் டிவி ரேட்டிங் பாயின்ட்ஸ் முறையை அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us