தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ அமெரிக்க பத்திரிகை புகார் மத்திய அரசு மறுப்பு

அமெரிக்க பத்திரிகை புகார் மத்திய அரசு மறுப்பு

அமெரிக்க பத்திரிகை புகார் மத்திய அரசு மறுப்பு


ADDED : ஏப் 01, 2025 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அமெரிக்காவின், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் மார்ச் 28ம் தேதி வெளியான செய்தி, மத்திய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன் விபரம்:


ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான, 'ஹெச்.ஆர்., ஸ்மித் குரூப்' என்ற நிறுவனம், 'டிரான்ஸ்மீட்டர்கள், காக்பிட் உபகரணங்கள் மற்றும் மிக முக்கியமான தொழிற்நுட்பங்களை, இந்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்துக்கு அனுப்பியது.

அதை பெற்றுக் கொண்ட ஹெச்.ஏ.எல்., சில தினங்களில் அவற்றை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த, 2023 - 24 காலகட்டத்தில், ஹெச்.ஆர்., ஸ்மித் - ஹெச்.ஏ.எல்., இடையே, 118 ஏற்றுமதிகள் நடந்துள்ளன.

அதை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும், 'ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்துக்கு, ஹெச்.ஏ.எல்., 13 ஏற்றுமதிகளை செய்துள்ளது.

அனுப்பப்பட்ட விமான உதிரி பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களின் குறியீட்டு எண் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த, 'ரோசோபோரோன் எக்ஸ்போர்ட்' நிறுவனம், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசால் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டை நம் வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி உள்ள செய்தி உண்மைக்கு புறப்பானது.

செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிறுவனம், சர்வதேச விதிகளை பின்பற்றியதுடன், வர்த்தக கட்டுப்பாடு மற்றும் ஒப்பந்தங்களை முறையாக கடைபிடிக்கிறது.

புகழ்பெற்ற ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது அதீத கவனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us