தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெள்ளி இறக்குமதி; கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு

வெள்ளி இறக்குமதி; கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு

வெள்ளி இறக்குமதி; கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு


ADDED : ஜூன் 03, 2026 01:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2026 01:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 99.9 சதவீத துகள், தூள் மற்றும் பிற வடிவிலான வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வெண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்க, தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி வரிகளை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், 99.9 சதவீத துகள், தூள் மற்றும் பிற வடிவிலான வெள்ளி இறக்குமதிக்கும் மத்திய அரசின் அனுமதி பெற வெண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்; நகை வியாபாரிகளால் மேற்கொள்ளப்படும் வெள்ளி இறக்குமதி, இனி வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தால் ( DGFT) வழங்கிய செல்லுபடியாகும் இறக்குமதி அங்கீகாரத்தின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும். டிஜிஎப்டியின் அங்கீகாரத்திற்குபட்டு, தூள் வடிவம், துகள்கள் மற்றும் வெள்ளியின் எடையில் 99.9 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட வெள்ளி இறக்குமதிக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us