தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 20 நாட்கள் ஹஜ் யாத்திரை மத்திய அரசு அறிமுகம்

 20 நாட்கள் ஹஜ் யாத்திரை மத்திய அரசு அறிமுகம்

 20 நாட்கள் ஹஜ் யாத்திரை மத்திய அரசு அறிமுகம்


ADDED : மே 17, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி: குறுகிய கால ஹஜ் யாத்திரை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பு, 45 நாட்களாக இருந்த யாத்திரை இதன் மூலம், 20 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவுக்கு, நம் நாட்டில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வர். வழக்கமாக இந்த யாத்திரைக்கு, 45 நாட்கள் எடுக்கும்.

இதனால், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், வணிகர்கள் உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளாவதாக தகவல் வெளியானது.

மேலும், இந்த யாத்திரையின் காலத்தை குறைக்கும்படியும் மத்திய அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் நேற்று கூறியதாவது:

பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்த கோரிக்கையின்படி, குறுகிய கால ஹஜ் யாத்திரை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இத்திட்டம், ஜூன் 5 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதன்படி, யாத்ரீகர்கள் தங்களது ஹஜ் கடமைகளை, 20 நாட்களுக்குள் நிறைவு செய்து தாயகம் திரும்ப முடியும்.

இந்த சிறப்பு திட்டத்தில் முதற்கட்டமாக, 10,000 பேர் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள், சவுதி அரேபியாவில் வழக்கமாக தங்கும், -45 நாட்களுக்கு பதிலாக, 20 நாட்கள் மட்டுமே தங்கி ஹஜ் பயணத்தை மேற்கொள்வர்.

இத்திட்டத்தின் கீழ், முதல் விமானம் கேரளாவின் கொச்சியிலிருந்து இன்று புறப்படுகிறது. தொடர்ந்து, டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து விமானங்கள் புறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us