UPDATED : டிச 18, 2024 03:30 AM
ADDED : டிச 18, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும் போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவச உடையினை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்.
வயலில் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது விவசாயிகளுக்கு மூச்சு திணறல், கண் பார்வை கோளாறு போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதை தடுப்பதற்காக உயிரி தொழில்நுட்ப துறையின் கீழ் பெங்களூரில் இயங்கும் பிரிக் - இன்ஸ்டெம் நிறுவனமும், மற்றொரு தனியார் நிறுவனமும் இணைந்து விவசாயிகளுக்கான கவச உடையை தயாரித்துள்ளன.
இலகுவான இந்த உடையை அணிந்து வயலில் மருந்து தெளிப்பது எளிதாக இருக்கும் என, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. துவைத்து அணியும் வகையிலான இந்த பாதுகாப்பு உடையின் விலை 4,000 ரூபாய்.