ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமானம் வாங்க ராணுவ அமைச்சகம் பச்சைக்கொடி
ரூ.3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமானம் வாங்க ராணுவ அமைச்சகம் பச்சைக்கொடி
ADDED : ஜன 18, 2026 10:32 PM

புதுடில்லி : நம் ராணுவ அமைச்சகம், பிரான்ஸ் நாட்டின் 114 ரபேல் போர் விமானங்களை 3.25 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நம் விமானப்படைக்காக, 36 ரபேல் போர் விமானங்கள் ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து ஏற்கனவே வாங்கப்பட்டன. மேலும் கடற்படைக்காக, ரபேல் - எம் எனப்படும் கடல் பாதுகாப்புக்கான 26 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஏப்ரலில் கையெழுத்தானது.இவை, கப்பலில்இருந்து பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை.
நம் விமானப்படைக்கு 42 படைப்பிரிவு தேவை. ஒரு படைப்பிரிவில், 18 முதல் 20 போர் விமானங்கள் இருக்கும். தற்போது இருக்கும் போர் விமானங்களின் எண்ணிக்கையின்படி, 29 முதல் 31 படைப்பிரிவு மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளன.பழைய மிக்-21, ஜாகுவார் போன்ற விமானங்கள் சேவையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ராணுவச் செயலர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார்.இதில், 114 ரபேல் போர் விமானங்களை வாங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், 12 முதல் 18 விமானங்கள் வாங்கப்படும். மீதமுள்ளவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்காக, நிறுவனம் பிரான்சின் ஏவியேஷன்' இந்திய ஒன்றுடன் 'டசால்ட் நிறுவனம் இணைந்து உற்பத்தியை துவங்கும்.
அடுத்ததாக, டி.ஏ.சி., எனப்படும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் மற்றும் பிரதமர் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் பெறப்பட வேண்டும்.பிரான்ஸ் இமானுவேல் மேக்ரான் அதிபர் அடுத்த மாதம் இந்தியா வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஒப்பந்தம் முடித்தால், நம் வசம் மொத்தம் 176 ரபேல் விமானங்கள் இருக்கும்.

