மல்யுத்த களமாக மாறிய சண்டிகர் மாநகராட்சி: கவுன்சிலர்கள் கைகலப்பு
மல்யுத்த களமாக மாறிய சண்டிகர் மாநகராட்சி: கவுன்சிலர்கள் கைகலப்பு
ADDED : டிச 24, 2024 02:59 PM

சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்யசபாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், அமித்ஷா பதவி விலக வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., கவுன்சிலர்கள், நேரு ஆட்சியில் அம்பேத்கர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி, கடைசியில் கைக்கலப்பில் ஈடுபட்டனர். இது சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.
அப்போது, மாநகராட்சியில் இருந்த நியமன கவுன்சிலரான அனில் மசியாவை, ஓட்டு திருடன் என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் குற்றம்சாட்ட, அதற்கு, ராகுல் ஜாமினில் வெளியே வந்தவர் என அவர் பதிலடி கொடுத்தார்.
இதுவும் மோதலை மேலும் தூண்டிவிட்டது. இதனையடுத்து மற்ற கவுன்சிலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.