UPDATED : பிப் 21, 2024 04:52 PM
ADDED : பிப் 21, 2024 04:41 PM

புதுடில்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நாங்கள் இறுதிவரை போராடி வெற்றி பெற்றுள்ளோம் என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பா.ஜ.,வை வீழ்த்த முடியாது என்றார்கள். ஒற்றுமையுடன் சரியான திட்டமிடலுடன், சரியான வியூகத்தை வகுத்து கடுமையாக உழைத்தால் பா.ஜ.,வை வீழ்த்த முடியும்.
உண்மையைத் தோற்கடிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் அரசியலமைப்பும், ஜனநாயகமும் வெற்றி பெற்றுள்ளன. உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இண்டியா கூட்டணிக்கு முதல் பெரிய வெற்றி.
சண்டிகர் மேயர் தேர்தலில் நாங்கள் இறுதிவரை போராடி வெற்றி பெற்றுள்ளோம். எங்களது ஓட்டுகளை அவர்கள்(பா.ஜ.,) திருடினார்கள். இது சண்டிகர் மக்களுக்கு கிடைத்த வெற்றி.நம் நாட்டில் எங்கும் அநீதி நிலவுகிறது. மக்களுக்காக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டிய மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் சிறையில் உள்ளனர்.
வரும் லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளை பெறுவோம் என பா.ஜ., எப்படி நம்பிக்கையுடன் கூறுகிறது. ஏதோ தவறு இருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை தன்வசப்படுத்தி இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

