சண்டிகர் மேயர் தேர்தல்: இண்டியா கூட்டணியை வீழ்த்தி பா.ஜ., வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தல்: இண்டியா கூட்டணியை வீழ்த்தி பா.ஜ., வெற்றி
UPDATED : ஜன 30, 2024 05:53 PM
ADDED : ஜன 30, 2024 01:54 PM

சண்டிகர்: சண்டிகர் மாநகர மேயர் தேர்தலில், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி கூட்டணி வேட்பாளரை தோற்கடித்து பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் விளங்குகிறது. சண்டிகர் மாநகர மேயர் தேர்தல் இன்று (ஜன.,30) நடைபெற்றது. இண்டியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.,வை எதிர்த்துக் களமிறங்கின.
மேயர் தேர்தலில் 'இந்தியா' கூட்டணிக்கு 20 ஓட்டுக்களும், பா.ஜ.,வுக்கு 16 ஓட்டுக்களும் கிடைத்தன. ஆனால் திடீரென 'இண்டியா' கூட்டணிக்கு கிடைத்த 20 ஓட்டுகளில் 8 செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இதனால் பா.ஜ.,வின் வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16
ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் 12
ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி
முதல்முறையாக இணைந்து போட்டியிட்டது. இண்டியா கூட்டணிக்கு தான் வெற்றி
கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தோல்வியை சந்தித்துள்ளது. இண்டியா கூட்டணி வேட்பாளர் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளார் என ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கு
சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.