சாந்திநகர் காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ் மனு தள்ளுபடி
சாந்திநகர் காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ் மனு தள்ளுபடி
ADDED : பிப் 22, 2024 11:17 PM

பெங்களூரு: தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, சாந்தி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கர்நாடக சட்டசபைக்கு, 2023ல் நடந்த தேர்தலில், பெங்களூரின் சாந்திநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, ஹாரிஸ் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் சிவகுமார் போட்டியிட்டார். ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது, ஹாரிஸ் தன் அசையும், அசையா சொத்துகள் குறித்து, முழுமையான தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.,வின் சிவகுமார் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஹாரிஸ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தேர்தல் விதிமீறல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டு, ஹாரிஸ் மனுவை, நேற்று தள்ளுபடி செய்தது.