ADDED : மார் 06, 2024 01:23 AM

புதுடில்லி: ஜனாதிபதி மாளிகை வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தன் குடும்பத்தினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.
டில்லி ஜனாதிபதி மாளிகையில் அமிரித் உத்யானில் உதயான் உஸ்தவ் விழா கடந்த பிப் 01-ல் துவங்கி மார்ச் 31-ல் நிறைவடைகிறது. அப்போது இங்குள்ள மொகல் கார்டன் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.
இதையொட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் தன் குடும்பத்தினருடனும், மற்றொரு நீதிபதி தன் குடும்பத்தினருடன் நேற்று ராஷ்டிரபதி பவன் எனப்படும் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறிது நேரம் அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள மொகல் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட் தன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதன் புகைப்படங்களை தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் ஜனாதிபதி முர்மு பதிவேற்றினார்.

