ADDED : அக் 05, 2025 11:24 PM

பெட்ரோலில் எத்தனால் கலக்கும் கொள்கை முடிவால் நம் நாட்டு சர்க்கரை ஆலைகளின் நிதி நிலைமை முழுமையாக மாற்றம் கண்டுள்ளது. மோடி பிரதமராக வந்த பின், சர்க்கரை கூட்டுறவுத் துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளது. எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு 10, 000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
அமித் ஷா மத்திய அமைச்சர், பா.ஜ.,
மனநிலையில் சந்தேகம்!
பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளிப்படுத்திய அசாதாரண நடத்தை, அவரின் மனநிலை சரியில்லை என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அவர் அரசை நடத்தும் திறனை இழந்துவிட்டார் என்று தெரிகிறது. அவரது இந்த நிலைக்கு உதவியாளர்கள் காரணமா அல்லது பா.ஜ.,வா?
தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
போலி மது பரவியுள்ளது!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அ ரசு மதுக் கடைகளைக் கைவிட்டு, சட்ட விரோத மது விற்பனையை வளர்த்து உள்ளார். அவரது கட்சியினர் போலி மது ஆலை களை நிறுவி அதை விற்பனை செய்து மக்களின் உயிருக்கு உலை வைக்கின்றனர். அதில் இருந்து வ ரும் வருவாயை கட்சிக்குள் பகிர்ந்துகொள்கின்றனர். இதனால் அரசுக்கும் வருவாய் இழப்பு.
ஜெகன் மோகன் ரெட்டி தலைவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்