sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநில தலைவர்கள் புத்தாண்டில் மாற்றம்? 3 கட்சிகளிலும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

/

மாநில தலைவர்கள் புத்தாண்டில் மாற்றம்? 3 கட்சிகளிலும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

மாநில தலைவர்கள் புத்தாண்டில் மாற்றம்? 3 கட்சிகளிலும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

மாநில தலைவர்கள் புத்தாண்டில் மாற்றம்? 3 கட்சிகளிலும் எதிர்பார்ப்பு அதிகரிப்பு


ADDED : ஜன 01, 2025 12:12 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தாண்டு பல மாற்றங்களை எதிர்பார்க்கும் மக்கள் மத்தியில், பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த.,விலும் மாற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இம்மூன்று கட்சிகளின் புதிய கணக்கு துவங்க உள்ளது. ஆம்... மாநிலத்தில் இம்மூன்று கட்சிகளிலும் தலைமையை மாற்றும் பணிகள் துவங்கி உள்ளன.

சிவகுமார்


மாநில காங்கிரஸ் பெரிய மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. மாநில காங்கிரஸ் தலைவராக, 2020 ஜூலை 2ல் சிவகுமார் பதவியேற்றார். அன்று முதல் கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்த, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

கட்சியின் அஸ்திவாரத்துக்கு தொண்டர்கள் முக்கியம் என்பதை நன்கு உணர்ந்த சிவகுமார், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றி வந்தார்.

இதன் மூலம் மாநிலம் முழுதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவர் மீது மரியாதை வைத்துள்ளனர். தன் பலத்தை அதிகரித்த சிவகுமார், 2023 சட்டசபை தேர்தலில், கட்சியை ஆட்சி கட்டிலில் வைத்து அழகு பார்த்தார். தான் முதல்வராவேன் என்று பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், சித்தராமையாவின் செல்வாக்கால், துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.

கடந்த 2022ல் உதய்பூரில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. அப்போது, 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அனைவருக்கும் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் சிவகுமார் விஷயத்தில், கட்சி மேலிடம், விதிமுறையை தளர்த்தியது. ஆம், சட்டசபையில் கட்சியை வெற்றி பெற வைத்தது போன்று, லோக்சபா தேர்தலிலும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, அவரே மாநில தலைவராக நீடிக்க கட்சி தலைமை கிரீன் சிக்னல் அளித்தது.

இதன்படி, கடந்தாண்டு லோக்சபா தேர்தலிலும், ஒன்பது இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற, கடினமாக உழைத்தார்.

தற்போது மாநில தலைவரை மாற்றும்படி மீண்டும் கட்சிக்குள் சர்ச்சை எழுந்துள்ளது. பெலகாவியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட கட்சி தலைமை மாநில தலைவரை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்தது யார்?


அடுத்த தலைவரை தேர்வு செய்யும்படி, கட்சி மேலிடம் உத்தரவிட்டாலும், சிவகுமார் போன்று தொண்டர்களை அரவணைத்து செல்லும் சக்தி வாய்ந்த தலைவர் யார் என்று தேடி வருகின்றனர். தனக்கு இடைஞ்சல் கொடுக்கும் சிவகுமாரின் ஆதரவாளர்களுக்கு, 'ஆப்பு' வைக்க முதல்வர் சித்தராமையா தீவிரமாக முயற்சிக்கிறார். தன் ஆதரவாளர்களில் ஒருவரை மாநில தலைவராக்க முடிவு செய்துள்ளார்.

இதை அறிந்த சிவகுமார், தன் ஆதரவாளர்கள் அல்லது லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த தன் சகோதரர் சுரேைஷ தலைவராக்க திரைமறைவில் காய் நகர்த்தி வருகிறார். இருவரில் யார் வெற்றி பெறுவர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தேயும் ம.ஜ.த.,


கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானிக்கும், 'கிங் மேக்கராக' இருந்த ம.ஜ.த., தொடர் தோல்வியால் சோர்ந்து போயுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனக்கு அடுத்தபடியாக, ரேவண்ணா, குமாரசாமியை களமிறக்கினார். தற்போது அவரின் பேரன்கள் பிரஜ்வல், சூரஜ், நிகில் ஆகியோரை களம் இறக்கி உள்ளார்.

கடந்த 2023ல் பா.ஜ.,வுடன் ம.ஜ.த., கூட்டணி அமைத்ததால், அதிருப்தி அடைந்த, அப்போது அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த இப்ராஹிம், விமர்சித்தார். அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்த தேவகவுடா, பின் அவரை கட்சியில் இருந்தும் நீக்கினார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் இப்ராகிம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாநில தலைவராக குமாரசாமி நியமிக்கப்பட்டார். லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்றார்.

தற்போது மத்திய அமைச்சராகவும், மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். மத்திய அமைச்சராக இருந்து கொண்டு, மாநில தலைவர் பதவியை நிர்வகிப்பது சுலபமல்ல என்பதை தேவகவுடா உணர்ந்தார்.

அத்துடன், கட்சியில் தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ள தொய்வை சரிகட்ட, இளம் ரத்தத்தை பாய்ச்ச முடிவு செய்துள்ளார். ஆனால், லோக்சபா தேர்தலில் சூரஜின் ஆபாச வீடியோ வெளியாகி, கட்சியின் இமேஜ் 'டேமேஜ்' ஆனது. தேர்தலில் தோல்வியடைந்த அவர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

பெங்களூரு திரும்பிய அவரை, விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் உள்ளார்.

மகன் வழக்கில் தொடர்புடைய பெண்ணை கடத்தியதாக, ரேவண்ணா மீதும் வழக்கு பதிவாகி, சிறைக்கு சென்றவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

இவரது மற்றொரு மகன் சூரஜ் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்து, சிறைக்கு சென்று ஜாமினில் உள்ளார். ஒரே குடும்பத்தில் மூவரும் அடுத்தடுத்து சிறை சென்றதால், தேவகவுடா மிகவும் நொந்து போனார்.

நிகிலுக்கு பதவி


இதனால், எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் இருப்பவரும், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நிகிலை தலைவராக்க ஆலோசித்துள்ளார். இதற்கு அச்சாரமாக, பொங்கலுக்கு பின், ம.ஜ.த., புதிய மாநில தலைவர் நியமிக்கப்பட உள்ளார் என குமாரசாமி அறிவித்தார்.

கடந்த சில நாட்களாக, புதிய மாநில தலைவர் தொடர்பாக கட்சி தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நிகில் மாநில தலைவராக தேர்ந்தெடுக்க, கட்சியின் இளம் தொண்டர்கள் விரும்புகின்றனர்.

வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பதால், தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உட்பட பல 'பிளஸ்'கள் உள்ளன.

அதேவேளையில், ஏற்கனவே அப்பா - மகன் கட்சி என்று கூறி வருபவர்கள், மீண்டும் அவர் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கே மாநில தலைவர் பதவி கொடுப்பதால், அதிருப்தி எழ வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மூன்று தொகுதிகளிலும் தோல்வி அடைந்தவர், மாநில கட்சியை எப்படி வழிநடத்தி செல்வார், என்றும் விமர்சிப்பர்.

புதிய திருப்பம்


காங்கிரஸ், ம.ஜ.த.,வை மன்னராட்சி கட்சிகள் என்று கூறி வந்த பா.ஜ.,விலும், தற்போது அதே நிலை தொடர்கிறது. முதல்வராக இருந்த எடியூரப்பாவை பதவிறக்கம் செய்து, பசவராஜ் பொம்மையை முதல்வராக்கினர்.

அன்று முதலே பா.ஜ.,வுக்கு இறங்கு முகம் துவங்கியது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்து, எதிர்க்கட்சியானது.

இதை தாமதமாக உணர்ந்த கட்சி மேலிடம், மாநில தலைவர் நளின் குமார் கட்டீல் பதவி காலம் முடிந்ததும், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு தலைவர் பதவியை அளித்தது.

அப்போது பதவி எதிர்பார்த்த பசனகவுடா பாட்டீல் எத்னால், சி.டி.ரவி அதிருப்தியடைந்தனர். விஜயேந்திரா தலைவராக பதவியேற்ற பின், நடந்த இடைத்தேர்தல்களில் சில இடங்களில் வெற்றி பெற்றாலும், லோக்சபா தேர்தலில் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

அத்துடன், காலியான மூன்று சட்டசபை தொகுதியிலும், தன் வசம் இருந்து ஒரு தொகுதியையும் பறிகொடுத்தது. இதற்கு விஜயேந்திராவின் சமரச கொள்கையே காரணம் என்று கட்சி தலைவர்களே குற்றம்சாட்டினர்.

அவரை மாற்ற வேண்டும் என்று எத்னால், ரமேஜ் ஜார்கிஹோளி உட்பட பலர், கட்சி மேலிடத்துக்கு வற்புறுத்தி வந்தனர். ஆனால் கட்சி மேலிடமோ, விஜயேந்திரா மாநில தலைவராக தொடருவார் என்று அறிவித்துவிட்டது.

2 'வெளியே' 2 'இன்'


ஆனால், இரண்டாம் கட்ட பதவியில் உள்ள நான்கு பேரில், இருவரை மாற்ற கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி ஜனவரி முதல் வாரத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நந்தீஷ் ரெட்டி, பிரீதம் கவுடாவை மாற்றி, எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா, எம்.எல்.சி., ரவிகுமாரை நியமிக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், தனக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு 'செக்' வைக்கவும்; உட்கட்சி பூசலை குறைக்கவும் விஜயேந்திரா திட்டமிட்டுள்ளார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us