ADDED : மார் 03, 2026 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'நாளை ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவை, குறிப்பிட்ட நேரம் வரை, அதாவது, மாலை, 5:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நேஷனல் கேபிடல் ரீஜினல் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் எனும், தேசிய தலைநகர் வட்டார போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நாளை, நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால், அந்த நாளில் மட்டும், காலை மற்றும் மதிய நேரங்களில், நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவை இருக்காது' என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை தவிர்த்து, பிற நாட்களில் வழக்கம் போல, காலை, 6:00 மணிக்கு துவங்கும் ரயில் சேவை, இரவு, 10:00 மணி வரை எந்த வித மாற்றமும் இன்றி செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

