sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாகமங்களா கலவரத்தில் போலீசார் மீது குற்றச்சாட்டு!: பா.ஜ., குழு அறிக்கையில் 'திடுக்' தகவல்

/

நாகமங்களா கலவரத்தில் போலீசார் மீது குற்றச்சாட்டு!: பா.ஜ., குழு அறிக்கையில் 'திடுக்' தகவல்

நாகமங்களா கலவரத்தில் போலீசார் மீது குற்றச்சாட்டு!: பா.ஜ., குழு அறிக்கையில் 'திடுக்' தகவல்

நாகமங்களா கலவரத்தில் போலீசார் மீது குற்றச்சாட்டு!: பா.ஜ., குழு அறிக்கையில் 'திடுக்' தகவல்


ADDED : செப் 21, 2024 07:00 AM

Google News

ADDED : செப் 21, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நாகமங்களா கலவரத்தில், போலீசார் மீது பா.ஜ., தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. 'போலீசார் தங்கள் பணியை சரியாக செய்யாததால், நாக மங்களாவில் கலவரம் ஏற்பட்டது' என, பா.ஜ., உண்மை கண்டறியும் குழு அறிக்கையில், 'திடுக்' தகவல் கூறப்பட்டுள்ளது.

மாண்டியா, நாகமங்களாவில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்க, கடந்த 11ம் தேதி இரவு ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

மசூதி அருகே ஊர்வலம் சென்றபோது, அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஊர்வலம் சென்றவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

52 பேர் கைது


சிறிது நேரத்தில் விநாயகர் ஊர்வலம் மீது மர்ம நபர்கள் கல் வீசியதுடன், வாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து, ஊர்வலம் சென்றவர்களை மிரட்டினர். போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர்.

ஆனாலும் கடைகள், வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், நாகமங்களாவில் நடந்தது சிறிய பிரச்சனை என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.

இதற்கு பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

புகைப்படங்கள்


'நாகமங்களா கலவரத்தை அரசு மூடி மறைக்க முயற்சி செய்கிறது' என்றும், பா.ஜ., குற்றம் சாட்டியது. நாகமங்களாவில் நடந்தது என்ன என்பதை கண்டறிய, முன்னாள் துணை முதல்வரும், மல்லேஸ்வரம் எம்.எல்.ஏ.,வுமான அஸ்வத் நாராயணா தலைமையில் உண்மை கண்டறியும் குழுவை, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அமைத்தார்.

அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பைரதி பசவராஜ், நாராயண கவுடா, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி பாஸ்கர் ராவ், கட்சியின் மாநில செயலர் லட்சுமி அஸ்வின் கவுடா ஆகியோர் இடம்பெற்றனர்.

இந்த குழு நாகமங்களா சென்று, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து என்ன நடந்தது என்று கேட்டறிந்தனர். இதை ஒரு அறிக்கையாக தயாரித்து, விஜேந்திராவிடம் நேற்று சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையில் கலவரம் தொடர்பான புகைப்படங்களும் இடம்பெற்று இருந்தது.

திட்டமிட்ட செயல்


பின், அஸ்வத் நாராயணா அளித்த பேட்டி:

நாகமங்களா மக்களிடையே அற்புதமான தோழமை இருந்தது. ஆனால், சிலரின் அரசியல் தலையீட்டால் அங்கு பிரச்னை ஏற்பட்டு உள்ளது. கலவரத்திற்கு போலீஸ் துறையின் முழுமையான தோல்வியை காரணம் என தெரிகிறது.

தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என போலீஸ் துறைக்கு அழுத்தம் உள்ளது. கலவரம் முன்கூட்டியே திட்டமிட்ட செயல். கடந்த ஆண்டும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர்.

வெறுப்பு அரசியல்


நாகமங்களா சமூக விரோத சக்திகள், துரோகிகள், பி.எப்.ஐ., அமைப்பினரின் புகலிடமாக உள்ளது. அங்கு போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன. நாகமங்களாவில் ஒருவரது பண்ணை வீட்டில் வங்கதேசத்தை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்கின்றனர். அவர்கள் எப்படி இங்கு வந்தனர் என தெரியவில்லை. எங்கள் ஆட்சியின் போது விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எந்த பிரச்னையும் நடக்கவில்லை.

ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் கலவரங்கள் நடக்கின்றன. கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என ஆட்சியாளர்கள் மிரட்டுகின்றனர். கவர்னரை மிரட்டிய காங்கிரஸ் எம்.எல்.சி., ஐவன் டிசோசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாநிலத்தில் தற்போது வெறுப்பு அரசியல் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us