ADDED : ஜூன் 24, 2026 06:25 AM

'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மலிவான அரசிய லில் ஈடுபடுகிறார். மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அச்சுறுத்த பார்க்கிறார். இந்த முழு விவகாரத்திலும் அவரது செயல்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கின்றன. பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவராக அவர் உள்ளார்.
- தர்மேந்திர பிரதான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
தரூருக்கு பாராட்டுகள்!
ஜம்மு - காஷ்மீரில் நிலவும் முன்னேற்றம் குறித்து, காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்த கருத்துகள் முற்றிலும் உண்மை. அரசியல் எல்லைகளை தாண்டி, உண்மையான கள நிலவரத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு என் பாராட்டுகள். காஷ்மீரில் தற்போது அமைதி நிலவுகிறது. பயங்கரவாதிகள் வேரோடு அழிக்கப்படுகின்றனர்.
- கவிந்தர் குப்தா கவர்னர், ஹிமாச்சல்
கவலை வேண்டாம்!
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, நாடு கடத்தும் பணியில் பா.ஜ., அரசு ஈடுபட்டு வருகிறது. ஊடுருவல்காரர்களுக்கு இனி இங்கு இடமில்லை. நம் நாட்டின் உண்மையான குடிமக்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவோ இருந்தாலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
- சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வர், பா.ஜ.,
