sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செக் போஸ்ட்

/

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்


ADDED : அக் 19, 2024 11:06 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யார் அந்த 'பிளாக் ஷிப்'

பெண் என்று பாராமல் தொல்லை தர்ராங்களேன்னு மீடியாக்காரர்கள் மீது குற்றம் சாட்டி கண்ணீர் விட்டு அழுத காட்சி பற்றி, நகர பகுதியில் பல்வேறு விமர்சனங்கள் எழும்பி உள்ளது.

யார் அந்த மீடியாக்காரர். அப்படி என்ன பெருசா அவதுாறு பரப்பினாங்க. அவங்க சொன்னது, உண்மையா... பொய்யா.

சர்வ அதிகாரம் படைத்த அசெம்பிளிக்காரரின் அழுகையில் மறைந்துள்ள தகவல் என்ன. எதற்கும் அஞ்சாத வீரமங்கையை அழ வைத்தது யாரு; அவங்க உள் நோக்கம் என்ன. இது பிளாக் மெயில் நாடகத்தின் விளைவா.

இதனை ஏன் மூடி மறைக்க வேண்டும். வெள்ளம் வரும் முன், அணை கட்டும் காக்கி பலம் இருக்கையில், துணிந்து சொல்லலாமே.

சில பிளாக் மெயில் பேர் வழிகளின் தவறான நடவடிக்கைகளுக்கு கல்லறை கட்ட வேண்டாமா.

ஆத்மா மன்னிக்குமா

படை தளபதியாக இருந்த இளவலை பறிகொடுத்து, துக்கத்தில் இருக்கும் அண்ணாவுக்கு இந்த ஆண்டு துக்ககரமான பிறந்த நாளாகும். ஆனால், அந்த கட்சிக்காரங்க வெளியுலகிற்கு ஜம்பம் காட்ட சோகமானவருக்கு பல இடங்களில் 'ேஹப்பி பர்த் டே' பேனர் வச்சிருக்காங்க.

இவங்களை, தம்பி ஆத்மா மன்னிக்குமா. உண்மையாவே வருத்தப்படுகிற பாசம், நேசம் உள்ள நீலம் அணியினரில் சிலர் பற்களை கடித்து வெறுப்பை காட்டுறாங்க.

இலையுதிர் காலம்!

அசெம்பிளியில் 3 முறை வென்று, 6 முறை தலைவர் பதவி பிடித்தது, கோல்டு சிட்டியின் இலை கட்சி.

இதன் தலைவர் புல்லுக்கட்டை சுமக்க சென்றதால், அந்த கட்சிக்கு இலையுதிர் காலமானது. அப்படியும் இன்னும், நாங்கள் வாத்தியார் சீடர்கள் என்பதை வெளிபடுத்த கட்சி நிறுவிய நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிச்சாங்க.

உதிர்ந்த இலை கட்சியின் சரிவை துாக்கி நிறுத்த, மாநில தலைமையும் இல்லை. மாநில செயலர் பதவிக்கு கோல்டு சிட்டி காரர் தான், 'காவேரிபாக்கம்' நிர்வாகி வீட்டில் சிபாரிசு செய்திருக்காரு. ஆனால் தலைமையோ, பட்டியல் வகுப்பினருக்கு வாய்ப்பு தருவதாக இல்லை என்ற ரகசியம் வெளிப்பட்டதால், பலருக்கு கலக்கம் ஏற்பட்டு இருக்குதாம்.

நான் தான் கேப்டன்

வெறுப்பில் இருந்த மாவட்ட பொறுப்பு மந்திரி, புதிய 'டவுன் ஷிப்' அமைப்பது குறித்து 'ப்ளு பிரிண்ட்' காபியுடன் முதன் முறையா, ஆபிசர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

நானும் இந்த மாவட்ட அரசு 'கன்ட்ரோலர்' என்பதை சொல்லி ஞாபக படுத்த, கோல்டு சிட்டியில் தலை காட்டியுள்ளார்.

ஏன்னா, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடு, உள்நாடு, ஐ.டி., - பி.டி., தொழில்நுட்ப கம்பெனிகள், குண்டூசி முதல் ஏரோபிளைன் உதிரி பாகங்கள் வரை தயாரிக்கும் மல்டி கம்பெனிகள் வர இருப்பதால், அதற்கான 'டீலிங்' விஷயத்தில், தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டு உள்ளார்.

கோல்டு சிட்டி வளமாகிறதோ... இல்லையோ, முக்கிய புள்ளிகள் வளமாகலாம். அதற்காகவே அவரது 'மாஸ்டர் பிரைன்' வேலை செய்திருக்குது.

ஏற்கனவே தனது கட்சியில் கோளாறு அதிகம் உள்ளதை அறிவார். இதில் பங்கு பரிவர்த்தனையில் தகராறு நடக்காமல் இருந்தால், அதுவே நலம் என்கிறாங்க.






      Dinamalar
      Follow us