sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செக் போஸ்ட்

/

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்


ADDED : டிச 17, 2024 11:51 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவேக் நகர் பூங்கா சீராகுமா?

கோல்டன் சிட்டி, அசெம்பிளிகாரரின் 'கெஸ்ட்' ஹவுஸ் ரா.பேட்டை விவேக் நகரில் உள்ளது. இதே பகுதியில் தான் காக்கிகளின் குடியிருப்பும், விவேகானந்தரின் சிலை உள்ள பூங்காவும் இருக்குது. இந்த பூங்காவின் அவல நிலையை சீரமைக்க, மேடம் பார்வைக்கு படலையா.

இதே பகுதியில் உள்ள காக்கிக்காரங்க குவாட்டர்ஸ் திறந்து கிடக்கும் கால்வாயில் சாக்கடை மிதக்குது. தினமும் துர்நாற்றத்தை சுவாசிக்கிறாங்களே. இதுக்கு சர்வ அதிகாரமும் படைத்த வங்க கவனிக்க தவறலாமான்னு சிலர் தினமும் கேள்வி மேல் கேள்வி கேட்கிறாங்க.

***

ஓய்வுக்கு பின்?

பொதுத்துறை நிறுவன பேக்டரியில் நடத்துற சொசைட்டியில் ஓய்வுபெற்றவங்க அதிகாரம் ஓவராக இருக்குதாம்.

ஓய்வுபெற்ற பின்னர் அடங்க வேண்டியவங்க எதுக்கு தலையிடணுமுன்னு உள்ளுக்குள் புகைச்சல் ஏற்பட்டிருக்குது. 'பட்டாசு சீட்டு' 2,000க்கும் மேற்பட்டவங்க இடம் பெற்று இருந்தனர். தற்போது 700 பேர் இருக்காங்களாம்; எண்ணிக்கையும் வருமானமும் குறைந்து போனதாக சொல்றாங்க.

ஓய்வுபெற்றவங்க சொசைட்டி நிர்வாகத்தில இருந்து ஒதுங்கிக்க வேணும்னு ஒரு கோஷ்டி சொல்றாங்க.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ப.பேட்டை சீட்டுக்காரரிடம் பல லட்சத்தை கொட்டி விட்டு, கொடுத்ததை பெற முடியாமல் மோசம் போனதை ஆலமரம் பகுதியில் சங்கத்தை வறுத்து எடுக்குறாங்களாம்.

***

*புது சர்ச்சை

சட்டம் பேசுற சங்கத்தோட தேர்தலை நடத்தாம ரெண்டு வருஷமா விதி மீறல் நடக்குதுன்னு சொல்றாங்க.

எலக் ஷனை நடத்தணுமுன்னு கேட்ட 'மாஜி' தலைவரு காலமானதால், தேர்தல் பற்றி பேச யாரும் முன் வராததால் சிலருக்கு கொண்டாட்டமா இருக்குதாம்.

'எக்ஸ்'- விழா கொண்டாட பிளான் ஒன்று போட்டிருக்காங்க. அப்படின்னா 'பாசுரம்' ஓதுற விழாவையும் நடத்துவாங்களாங்கிற 'சின்ன கேள்வி' பெரிய விவாதமா பேசுறாங்க. அப்படின்னா மற்றொரு விழாவும் நடத்த வேண்டி இருக்கும் என்ற கருத்தும் வெளிபடுது.

சட்டமே வேதமாக இருக்கும்போது, புது புதுசா சிக்கல் தேவை தானா என்று கேள்வி, சட்டம் பேசுறவங்க மத்தியில் நடமாடுது.

***

பினாயில் தெளிப்பு?

கோல்டு சிட்டி முனிசி.,யில் கண்ட இடங்களில் குப்பைகள் கொட்ட கூடாதென நகரில் பல இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவிட்டு 'எவர்சில்வர் ஸ்டீல்' தொட்டிகளை வச்சாங்க.

அந்த தொட்டிகள் எல்லாம் எங்கே போனது. கால் முளைத்து காயலான் கடைக்கு சென்று விட்டதா. இது பற்றி காக்கி ஸ்டேஷனில் புகார் கொடுத்தாங்களா.

குப்பை தொட்டிகள் இல்லாததால், மறுபடியும் சாலைகளில் குப்பைகளை வீசியெறியும் நிலை தான் தொடருது. பஸ் நிலையம், பூங்கா, மக்கள் கூடும் இடங்களில் இதே கதி தான். சுகாதார சீர்கேடு உள்ளதை கவனிக்க மறக்கலாமா.

முனிசி., யில் பினாயில், கிருமி நாசினி பவுடர்களை வாங்குறதா சொல்றாங்க. அது எங்கே, யார், எப்போது, பயன் படுத்துறாங்க; தெரியலையே. இப்புடி ஜனங்க கேட்குறாங்களே.






      Dinamalar
      Follow us