sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செக் போஸ்ட்

/

செக் போஸ்ட்

செக் போஸ்ட்

செக் போஸ்ட்


ADDED : பிப் 20, 2025 06:39 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாருக்கு என்ன லாபம்?

மண்வாரி தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து 26 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துனாங்க. இதனால, இவங்களுக்கு, எந்த பிரயோஜனமும் இல்லியாம். இது பழைய கதை.

புதுக்கதையாக, இவங்கள துாண்டிவிட்டு ஸ்டிரைக் செய்ய வைத்த கேப்டன்களின் வாரிசுகளுக்கு நிரந்தர அப்பாய்மெண்ட் வாங்கிக் கொண்டதா தகவல் கசிந்திருக்கு.

இதுக்கு தானா ஸ்டிரைக் நடத்தினோம்னு பிளவு ஏற்பட்டிருக்குதாம். யூதாஸ், எட்டப்பர், புரூட்டஸ் சந்ததியினர் இன்னும் கூட மறையலயாம்.

நிர்வாக அதிகாரிகளுக்கு அடிமையாகி, தலையை ஆட்டின 2 கேப்டன்கள் மட்டுமே லாபம் அடைந்தாங்க.

ஆனால் 3,000 ஊழியர்கள் ஏமாற்றம் ஆனதாக சொல்றாங்க. இது நிஜமான்னு யோசிக்க வெச்சிருக்கு. இதைப்பற்றிதான் கதா காலேட்சபம் நடக்குது. சந்தா வாங்கின கேப்டன்கள் தொழிலாளர்களை சந்திக்கவே இல்லையாம்.

***

என்ன செய்கிறது நுாலகத் துறை?

இன்னும் கூட கோல்டு மைன்ஸ் நிலத்தை மா.அரசிடம் ஒப்படைக்கவில்லை. ஆனாலும், மாநில அரசுக்கு உட்பட்ட மைன்ஸ் நிலத்தில் 12வது வார்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டி திறப்பு விழாவை நடத்திட்டாங்க.

அதேபோல, மற்ற வார்டுகளிலும் கூட முனிசி., நிர்வாகம் தேவையான நுாலகம், படிப்பகம், ஏற்படுத்தலாமே.

மாநில அரசு நுாலகத் துறை இயக்குநர் கோல்டு சிட்டிக்கு வந்தப்ப, கட்டடம் கொடுத்தால் நுாலகம் ஏற்படுத்த தயார்னு கூறினாரு.

சுமார் 1 லட்சம் பேர் வசிக்கிற மைனிங் பகுதியில, 95 சதவீதம் எழுத்தறிவுள்ளவர்கள். ஆனால், அரசு நுாலகம் இருப்பதோ ஒன்றோ அல்லது இரண்டோ.

அதனால பயன் தர்ர நுாலகம் ஏற்படுத்த கட்டடம் கட்டலாமே.

இதுக்கு திட்டம் உருவாக்க தயக்கம் காட்டலாமா 12வது, 16வது வார்டில் படிப்பக கட்டடம் கட்டப்பட்டதாக சொல்றாங்களே, அது இயங்காம மூடி வைக்கலாமா? பொது நுாலக துறையின் கவனத்திற்கு இதுவரை இந்த கட்டடம் பற்றிய தகவல் தெரியுமா? இதுக்கெல்லாம் யார் தான் பொறுப்போ??

***

ஏமாறும் ஒப்பந்ததாரர்கள்!

பட்ஜெட் கூட்டத்தொடருல, கோல்டு சிட்டி தொகுதிக்கு என்ன அறிவிப்பு வருமோன்னு தொகுதி மக்கள் காத்து கெடக்காங்க.

ஆண்டுக்கொரு கட்டடம், 8 கோடி, 10 கோடி என பல கோடி ரூபாய் செலவுல கட்டப்பட்டது.

அதேபோல, இந்த பட்ஜெட்டில எதுக்கு கட்டடம் கட்ட பணம் கேட்க போறாங்களோ?

தொழிற்பூங்கா திட்டத்தில உள்நாட்டு வெளிநாட்டு கம்பெனிகள வரவழைக்க, வித்தைகள காட்ட எத்தனை நுாறு கோடி அறிவிப்பு வருமோ?

இத செயல்படுத்த யாருக்கு ஒப்பந்த சான்ஸ் கிடைக்க போகுதோ?

இதுவும் கூட, தெரு மின் விளக்கு ஒப்பந்தம் போல கை மாறிடுமோ?

உள்ளூரு ஒப்பந்ததாரர்களுக்கு இந்த மொறையும் ஏமத்தமா?

***

பொதுநலம் எப்போ வருமோ?

வீட்டுக்கு வீடு பட்டதாரிங்க உருவாகி வரும் கோல்டு தொகுதியில், மக்கள் பிரதிநிதிகளாக அதிகார பலத்தை பெற்றவர்கள், இதுவரை அரசின் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லுாரி எதுவுமே ஏற்படுத்தல.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவரை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் கூட இதுவரையில் ஒருத்தரும் மந்திரி ஆகவில்லயேங்கற ஏக்கம் தான் அரசியல் வட்டாரத்தில் பெருசா இருக்குதே தவிர, அரசின் பொறியியல், மருத்துவ கல்லுாரிகள் ஏற்படுத்தும் சிந்தனை எழுந்ததாக தெரியலையே.

உள்கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வசதிகள் இருந்தும் கூட தங்கமான நகரின் வளர்ச்சிக்கு பொது நல சிந்தனை எப்போ வருமோ?






      Dinamalar
      Follow us