உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : பிப் 20, 2024 11:34 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு, : லோக்சபா தேர்தல் எப்போது அறிவிக்கப்படும், என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்படும் என்பதை அறிய நம்மில் பலருக்கும் ஆர்வம் உண்டு.
இதற்காக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சார்பில், புதிதாக, 'வாட்ஸாப் சேனல்' துவக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக, அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள, அந்த வாட்ஸாப் சேனலை பார்க்கும்படி முகநுாலில் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸாப்பில் சென்று, Chief Electoral Officer Karnataka என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, சேனலில் இணைந்து கொள்ளலாம்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு உத்தரவையும்; மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவையும், அறியலாம்.
