ADDED : பிப் 27, 2024 06:43 AM

சிக்கமகளூரு : தேர்தல் முறைகேட்டைத் தடுப்பதற்காக, சோதனை சாவடிகள் அமைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது உட்பட தேர்தல் முறைகேட்டை தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் சார்பில், தொகுதி வாரியமாக முக்கியமான இடங்களில் தற்காலிக வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்படுவது வழக்கம்.
இப்படி மாநிலம் முழுதும், அண்டை மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள், தொகுதி எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
எந்தெந்த பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட வேண்டும் என்பதை அடையாளம் காணும் பணியில், கலெக்டர்களும், எஸ்.பி.,க்களும் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் அட்டவணை அறிவிக்கும் நாள் முதலே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
அன்று முதலே சோதனை சாவடிகளும் அமைக்கப்படும். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இதற்கான ஏற்பாட்டை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், சிக்கமகளூரின் பல்வேறு இடங்களில், கலெக்டர் மீனா நாகராஜ், எஸ்.பி., விக்ரம் அமதே உட்பட உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்க தயாராகும்படி, உள்ளூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இது அனைத்து மாவட்டங்களிலும் உயர் அதிகாரிகள் தேர்தல் முறைகேட்டை தடுப்பதற்கு தேவையான ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.
