திருநாவாய நாவாமுகுந்தர் கோவிலில் சென்னை பக்தர்கள் துாய்மை பணி
திருநாவாய நாவாமுகுந்தர் கோவிலில் சென்னை பக்தர்கள் துாய்மை பணி
ADDED : பிப் 04, 2025 08:13 PM

பாலக்காடு:மலப்புரம் அருகே, திருநாவாய நாவாமுகுந்தர் கோவிலில், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் துாய்மை பணி மேற்கொண்டனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பாரத புழா ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற திருநாவாய நாவாமுகந்தர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவரை தரிசிக்க சென்னையிலிருந்து இரு புனித யாத்திரிகர் குழுக்களாக வந்தனர்.
மூலவரை வழிபட்ட குழுவினர், கோவிலை சுத்தம் செய்ய விருப்பம் தெரிவித்து, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
பின், கோவில் நிர்வாகத்தின் ஒப்புதலோடு, கோவில் சுற்றுச்சுவர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பகுதி, புல் வெட்டுதல், தூசு அகற்றுதல், சுற்று விளக்கு மற்றும் விளக்குகள் கழுவுதல் என, அனைத்து விதமான துாய்மை பணிகளிலும் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து வந்த, சந்திரசேகரன், தனலட்சுமி தலைமையிலான, 50 பேர் கொண்ட குழுவினர், வரதராஜன் தலைமையிலான 30 பேர் இரு நாட்கள் தங்கி, இப்பணிகளை மேற்கொண்டது.
கோவில் நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன், இக்குழுவினருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார்.