தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.96,160க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.96,160க்கு விற்பனை

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.96,160க்கு விற்பனை


ADDED : டிச 04, 2025 09:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 09:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் இன்று (டிச.,04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,02) ஆபரண தங்கம் கிராம், 12,040 ரூபாய்க்கும், சவரன், 96,490 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று (டிச.,03) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் அதிகரித்து, 12,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் உயர்ந்து, 96,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (டிச.,04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ. 96,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 சரிந்து ஒரு கிராம் ரூ.12,020க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us