sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் பதில்!

/

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் பதில்!

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் பதில்!

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; சிதம்பரத்துக்கு தேர்தல் கமிஷன் பதில்!

37


UPDATED : ஆக 03, 2025 05:55 PM

ADDED : ஆக 03, 2025 04:49 PM

Google News

37

UPDATED : ஆக 03, 2025 05:55 PM ADDED : ஆக 03, 2025 04:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ,'' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். இதனை ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ள தேர்தல் கமிஷன், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனத் தெரிவித்துள்ளது.

பீஹாரில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பணிகள் நடந்தது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் எங்கு உள்ளனர் என கண்டுபிடிக்க முடியவில்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தன. பார்லிமென்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

இந்நிலையில் சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறப்பு வாக்காளர் திருத்தம் மேலும் சுவாரஸ்யம் ஆகி வருகிறது.பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆபத்தானது. சட்டத்துக்கு எதிரானது.

இவர்களை நிரந்தரமாக வெளியேறிவிட்டதாக கூறுவது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அவமானம். தமிழக வாக்காளர்கள் தங்கள் விருப்பப்படி அரசை தேர்வு செய்யும் உரிமையில் மிகப்பெரிய அளவில் தலையிடுவதற்கு சமம் ஆகும்.

புலம்பெயர் தொழிலாளர்கள், சட்டசபை தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு தங்களது மாநிலத்துக்கு ஏன் திரும்பக்கூடாது. இதனை அவர்கள் வழக்கமாக செய்கின்றனர். 'சாத்' பூஜை பண்டிகையின் போது, புலம்பெயர் தொழிலாளர்கள் பீஹாருக்கு திரும்பி வருவது வழக்கமானது.

கேள்வி

ஒருவர், தன்னை வாக்காளராக பதிவு செய்து கொள்ள, நிலையான மற்றும் நிரந்தரமான சட்டப்பூர்வமான வீடு தேவை. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீஹார் அல்லது வேறு மாநிலத்தில் அப்படி ஒரு வீடு இருக்கும். அப்படி இருக்கையில், அவர் எப்படி தமிழகத்தில் வாக்காளராக பதிவு செய்ய முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பீஹாரில் நிரந்தரமாக வீடு இருந்து அங்கேயே வசித்து வந்தால், அவர் எப்படி தமிழகத்துக்கு நிரந்தரமாக புலம்பெயர்ந்துவிட்டார் எனச் சொல்ல முடியும். தேர்தல் கமிஷன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. மாநிலங்களின் தேர்தல் தன்மை மற்றும் முறைகளை மாற்ற முயற்சி செய்கிறது.

இந்த அதிகாரதுஷ்பிரயோகத்துக்கு எதிராக அரசியல் மற்றும் சட்டரீதியாக போராட வேண்டும்.எங்கு நிரந்தரமான வீடு இருக்கிறதோ அங்கு தங்கியிருந்து பணியாற்ற அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உண்டு. அது வெளிப்படையானது.

பீஹாரில் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இருந்த பல லட்சம் பேர், மாநிலத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதால், அவர்களை நீக்கும் முடிவுக்கு தேர்தல் கமிஷன் எப்படி வந்தது? இதுவே கேள்வி

ஒருவர் நிரந்தரமாக மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்பதை முடிவு செய்வதற்கு முன்னர், அந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? 37 லட்சம் பேர் குறித்து, 30 நாட்களுக்குள் எப்படி விசாரணை நடத்தப்பட்டது.

பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தீவிர பிரச்னை. இதனால், தான் இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் சிதம்பரம் கூறியுள்ளார்.

மறுப்பு


இந்த குற்றச்சாட்டு தவறானது மற்றும் ஆதாரமானது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

* அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(e) ன்படி, அனைத்து குடிமக்களுக்கும், நாட்டின் எந்தப் பகுதியிலும் குடியேறவும், வாழவும் உரிமை உண்டு.

* மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 19(b) ன்படி, ஒரு தொகுதியில் சாதாரணமாக குடியிருக்கும் அனைவரும், அந்த தொகுதியில் வாக்காளராக பதிவு செய்து கொள்ள தகுதி பெறுகிறார்.

* 1950 ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 20வது பிரிவின்படி, அவருக்கு சாதாரணமாக குடியிருப்பவர் என்ற அர்த்தம் உள்ளது.

எனவே, ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் டில்லியில் சாதாரணமாக குடியிருந்தால் அவர், டில்லியில் வாக்காளராக பதிவு செய்து கொள்ள உரிமை உண்டு. அதேபோல், ஒருவர் பீஹாரை சேர்ந்தவராக இருந்தாலும், சென்னையில் சாதாரணமா வசித்து வந்தாலும், அவர் அங்கு வாக்காளர் பட்டியலில் இடம்பெற தகுதிஉண்டு.


நாடு முழுதும், தேர்தல் கமிஷன் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டிய அவசியம் அரசியல் கட்சிகளுக்கு இல்லை.

இந்தப் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், மீடியாக்களில் இதுபோன்ற கருத்துகள் மீடியாக்களில் வேண்டுமென்றே பரப்பப்படுகிறது என்ற தகவல் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு வந்துள்ளது.

தங்களுக்கு தகுதியுள்ள தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் இடம்பெற பதிவு செய்து கொள்ள வேண்டியது வாக்காளரின் கடமை. தமிழகத்தில் 6.5 லட்சம் வாக்காளர்கள் மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு பணி தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தவில்லை. எனவே, இந்தப் பணி குறித்து பீஹாரையும், தமிழகத்தையும் தொடர்புப்படுத்துவது அபத்தாமானது. இதுபோன்ற அவதூறு கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us