மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்: சொல்கிறார் தலைமை நீதிபதி சந்திசூட்
மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்: சொல்கிறார் தலைமை நீதிபதி சந்திசூட்
ADDED : ஆக 06, 2024 01:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 'மகளின் அறிவுரையை கேட்டு சைவத்திற்கு மாறிவிட்டேன்' என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.
இது குறித்து, சந்திரசூட் கூறியதாவது: நானும் என் மனைவியும் பட்டு நூலினால் ஆன பொருட்களையும், தோல் பொருட்களையும் வாங்குவது இல்லை. எங்களிடம் இருக்கும் பொருட்களை தூக்கி எறிய முடியாது. எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
சைவம்
நான் எதைச் செய்தாலும் அவர்கள் என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறார்கள். நாம் எதற்கும் கொடுமை செய்யாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், சைவத்திற்கு மாறுமாறு என் மகள்களில் ஒருவர் கூறினார். அதனால் சமீபத்தில் நான் சைவத்திற்கு மாறிவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.