வாரிசுகளுக்கு -என்.டி.எம்.சி.,யில் வேலை நியமன உத்தரவு வழங்கினார் முதல்வர்
வாரிசுகளுக்கு -என்.டி.எம்.சி.,யில் வேலை நியமன உத்தரவு வழங்கினார் முதல்வர்
ADDED : மே 16, 2026 11:33 PM

புதுடில்லி: ''பணி நியமனம் பெற்றவர்கள் பொதுச்சேவைக்கான வாய்ப்பாக கருத வேண்டும்,'' என, என்.டி.எம்.சி., எனப்படும் புதுடில்லி முனிசிபல் கவுன்சிலில் பணி நியமன உத்தரவை வழங்கிய முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
புதுடில்லி முனிசிபல் கவுன்சிலில் பணிக்காலத்தில் மரணம் அடைந்தோரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவு மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கன மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
புதுடில்லி முனிசிபல் கவுன்சிலின் இந்த நடவடிக்கை, பணிக்காலத்தில் மரணம் அடைந்தோரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்.
அதேநேரத்தில், ஊழியர் நலனுக்கான அரசின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும்.
பல்வேறு நிர்வாக சிக்கல்கள் இருப்பதால், வாரிசு வேலை வழங்கு வதற்கு பெரும்பாலும் நீண்ட ஆண்டுகள் ஆகும். ஆனால் , புதுடில்லி முனிசிபல் கவுன்சில் அனைத்து நடைமுறைகளையும் விரைந்து முடித்துள்ளது.
இந்த பணி நியமனத்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதிப் பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும் கிடைக்கும். என்.டி.எம்.சி.,யில் பணி நியமனம் பெற்றுள்ளோருக்கு புதிய அத்தியாயம் துவங்குகிறது.
பணி நியமனம் பெற்றுள்ளோர் தங்களுக்கு கிடைத்த பொதுச் சேவைக்கான வாய்ப்பாகக் கருத வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கமாக கொண்ட பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.
அதேபோல, ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுக ளை சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவும்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அரசின் நலத்திட்டப் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, புதுடில்லி லோக்சபா எம்.பி., பான்சூரி ஸ்வராஜ், புதுடில்லி முனிசிபல் கவுன்சில் தலைவர் கேசவ் சந்திரா, துணைத் தலைவர் குல்ஜீத் சிங் சஹால், கவுன்சிலர்கள் சரிதா தோமர், அனில் வால்மீகி, தினேஷ் பிரதாப் சிங் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
